Idhayam Matrimony

சாம் கான்ஸ்டாஸுக்கு மிகப்பெரிய அனுபவம் காத்திருக்கிறது: ஸ்மித்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      விளையாட்டு
Stuv-Sumet 2024-01-13

Source: provided

சிட்னி : சாம் கான்ஸ்டாஸ் நன்றாக விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் அவருக்கு மிகப்பெரிய அனுபவம் காத்திருக்கிறது என்று கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

பிஜிடி தொடரில் அறிமுகமான 19 வயதாகும் சாம் கான்ஸ்டாஸ் பும்ரா ஓவரில் ரிவர்ஸ் ரேம்ப் ஷாட்டில் சில்ஸரும் பவுண்டரிகளுமாக அடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்த கான்ஸ்டாஸ் கிரிக்கெட் உலகில் கவனம் ஈர்த்தார். இலங்கை உடனான டெஸ்ட் தொடர் இன்று முதல் (ஜன.29) தொடங்குகிறது. அதில் கான்ஸ்டாஸுக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக களமிறங்குகிறார் என ஆஸி. இடைக்கால கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

மிகப்பெரிய அனுபவம் 

சாம் கான்ஸ்டாஸுக்கு அதிகமாக பயிற்சி தேவைப்படுகிறது. அவர் சரியாக விளையாடாவிட்டால் அது அவருக்கும் ஒரு சிறந்த முன்னேற்றமாக இருக்கும். 2013இல் நான் இந்தியாவில் முதலிரண்டு டெஸ்ட்டில் சரியாக விளையாடவில்லை. அதனால் அதிகமான பந்துகளை வலைப் பயிற்சியில் விளையாடினேன். பல வீரர்களை நான் வலைப் பயிற்சியில் விளையாடி எனது திறமையை வளர்த்துக் கொண்டேன். அதனால், சாம் கான்ஸ்டாஸ் நன்றாக விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் அவருக்கு மிகப்பெரிய அனுபவம் காத்திருக்கிறது. இது அவருக்கு கற்றலுக்கான மிகப் பெரிய வாய்ப்பாகவும் அமையும் எனக் கூறினார்.

புதிய அறிமுகம்

புதியதாக அணியில் ஜோஷ் இங்கிலீஷ் அறிமுகமாகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. பிஜிடி தொடரில் அறிமுகமாகி பின்னர் நீக்கப்பட்ட நாதன் மெக்ஸ்வீனியும் மிடில் ஆர்டரில் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இவர் கூடுதலாக ஆப் - ஸ்பின் பந்துவீசுவதால் இலங்கையில் நன்றாக இருக்குமென ஸ்மித் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து