எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஈரோடு : பெரியாரை பற்றி பேசி சீமான் தன்னை பெரிய தலைவராக காட்டிக்கொள்ள நினைக்கிறார் என்று கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது:-
வடநாட்டை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தொழில் செய்வது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புரியாமல் பேசி வருகிறார். இதேபோல் வேறு மாநிலத்தில் தமிழர்கள் வேலை செய்வதை என்ன செய்ய முடியும்?.
இந்த தேர்தலில் திராவிடத்துக்கும், தேசியத்துக்கும் ஒரு போரும் கிடையாது. பெரியார் பற்றி சீமான் பேதுவது புதிதல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்பு கி.வீரமணியை விட பெரியாரை சீமான் புகழ்ந்து பேசினார். இந்தநிலையில் பெரியாரை பற்றி பேசி, சீமான் தன்னை பெரிய தலைவராக காட்டிக்கொள்ள நினைக்கிறார்.
ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்ற கவர்னரின் கருத்து வரவேற்கத்தக்கது. ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல தினமும் பேசி வருகிறார். எதற்காக திருவள்ளுவர் சிலைக்கு காவி ஆடை போர்த்தி மரியாதை செலுத்துகிறார் என்றும் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் சிறந்த விவாதம் நடப்பதில்லை. பா.ஜனதாவின் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


