Idhayam Matrimony

மாணவி வன்கொடுமை எப்.ஐ.ஆர். கசிந்த விவகாரம்: மூன்று பத்திரிகையாளர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் : சிறப்பு புலனாய்வுக்குழு நடவடிக்கை

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      தமிழகம்
Phone

Source: provided

சென்னை : அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் 'லீக்' ஆன சம்பவத்தில், பத்திரிகையாளர்கள் 3 பேரின் மொபைல்போன்களை சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க.,வை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் இணையத்தில் கசிந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, எப்.ஐ.ஆர்., 'பிளாக்' செய்யப்படவில்லை என்று போலீஸ் கமிஷனர் அருண், பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இது பற்றி, போலீஸ் மீது பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஐகோர்ட் நீதிபதிகளும் கேள்வி எழுப்பினர். சுப்ரீம் கோர்ட் சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்தது. இந்நிலையில், எப்.ஐ.ஆர்., நகல் 'லீக்' ஆன சம்பவத்தில் பல்வேறு நபர்களிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், 3 பத்திரிகையாளர்களின் மொபைல்போன்களை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து