Idhayam Matrimony

டெல்லி கட்டிட விபத்து: பலி 5 ஆக அதிகரிப்பு

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      இந்தியா
Accident-1

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியின் புராரி பகுதியில் உள்ள ஒரு நான்கு மாடி கட்டிடம் நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் இடிபாட்டிற்குள் சிக்கியிருப்பவர்களை நேற்றிலிருந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் இந்த இடிபாட்டில் இருந்து 12 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் அனில் குப்தா(42), எம்டி சர்பராஸ்(22) மற்றும் எம்டி காதர்(40) என அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் மீட்கப்பட்டவர்களில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனா். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து