Idhayam Matrimony

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 25-ஆக உயர்வு : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      தமிழகம்
Ma Supramanian 2024-08-21

Source: provided

சென்னை : அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருததுவமனையில் ரூ.362.87 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை  நிதியுதவியுடன் புதிய டவர் பிளாக் கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சென்னை மக்களின் குறிப்பாக மத்திய சென்னை, வடசென்னை மக்களின் மிகப் பெரிய அளவிலான மருத்துவ சேவைக்கு ஆதாரமாக இருக்கும் மருத்துவமனை ஆகும். இம்மருத்துவமனை அகில இந்திய அளவில் புகழ்பெற்ற தீக்காய சிகிச்சைகளுக்கும் பெயர் எடுத்த ஒரு மருத்துவமனை ஆகும். இம்மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ வசதிகளை முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஏராளமாக செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஏற்கெனவே இந்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த தீவிர மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு  கட்டடம் இம்மருத்துவமனையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த அரசுப் பொறுப்பேதற்கு முன் 19 இடங்களில் மட்டுமே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் இருந்தது. முதல்வர் ஸ்டாலினின் அரசுப் பொறுப்பேற்றபிறகு புதிதாக 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் பயன்பாட்டிற்கு மிக விரைவில் வர உள்ளது. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளைப் பொறுத்தவரை 19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் 6 தலைமை மருத்துவமனைகளுக்கு இணையாக மருத்துவ கட்டமைப்புகளை கொண்ட மருத்துவமனைகள். இந்த 25 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு ரூ.1,018 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்னும் 3 மாதம் காலங்களில் அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிவுற்று முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். எங்கு விபத்துகள் நேர்ந்தாலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் தாராபுரம் அரசு மருத்துவமனை, ரூ.20 கோடி செலவில் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நிகராக வகையில் தாராபுரம் மற்றும் காங்கேயம் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்கள்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து