Idhayam Matrimony

வரும் 6-ம் தேதி திருநெல்வேலி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

நெல்லை : வருகிற  6, 7 ஆகிய தேதிகளில் நெல்லைச் சீமைக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், அந்தந்த மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடக்கி வைத்தும் புதிய அறிவிப்பைகளை அறிவித்தும் வருகிறார். முன்னதாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை இரவு மக்கள் சந்திப்பு நிகழ்விலும், திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இதைத் தொடா்ந்து, வழுதரெட்டி பகுதியில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபம், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்நிலையில் வருகிற 6, 7-ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் நெல்லை செல்கிறார். அங்கு கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இது பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2026 வெற்றிக்கு அச்சாரமாக விழுப்புரம் மக்கள் அளித்த வரவேற்பின் எழுச்சியோடு, வருகிற 6,7 தேதிகளில் நெல்லைக்கு வருகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதல்வர் ஸ்டாலின் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் மீனவர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து