Idhayam Matrimony

சமத்துவத்திற்காக தன்னையே தியாகம் செய்தவர் காந்தியடிகள்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, நாட்டின் சமத்துவத்திற்காக தன்னையே தியாகம் செய்த அண்ணல் காந்தியடிகள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது  உருவ சிலைக்கு காந்தியவாதிகள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

அறவழியில் ஆங்கிலேயரை வென்ற அமைதிப் புரட்சியாளர், சத்திய வழியை மானுட உலகத்திற்கு காட்டிய வழிகாட்டி, நம் இந்தியத் திருநாட்டின் கொள்கைத் தந்தை அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளில், மகாத்மாவின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன். நாட்டின் சமத்துவத்திற்காக தன்னையே தியாகம் செய்த அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளில், நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த உத்தமர்கள் அனைவரையும் நினைவுகூர்வதுடன், தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவைக் கட்டமைக்க உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து