எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கிய வழக்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ரூ. 190 கோடி நிவாரணம் வழங்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அப்போது, தோல்வியை தழுவிய டொனால்டு டிரம்ப், அதனை ஏற்க முடியாமல், டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.
மேலும், தனது பேச்சை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்தார். அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள், ஜோ பைடன் அதிபராக பதவியேற்க இருந்த தலைமை செயலக கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கோடிக்கணக்கான பாலோயர்களைக் கொண்ட டிரம்ப்பின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா அதிகாரப்பூர்வ கணக்குகள் முடக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தன் மீது அவதூறு சுமத்தி, தன்னுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி விட்டதாக டிரம்ப் வழக்கு தொடர்ந்தார். தற்போது அவர் மீண்டும் அதிபரான நிலையில், இந்த வழக்கில் பணிந்து போக மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. கணக்கை முடக்கியதால் பாதிக்கப்பட்ட டிரம்ப்புக்கு 22 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்க மெட்டா முன்வந்துள்ளது. இது, இந்திய மதிப்பில் 190 கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ., மார்க் ஜூகர்பெர்க் தரப்பு வக்கீல், கலிபோர்னியா கோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதால், இந்த வழக்கை விரைவில் முடித்துக் கொள்கிறோம்,' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தொகை தொடர்பாக எந்த விபரமும் குறிப்பிடவில்லை பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த டிரம்ப்புக்கு இது வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


