Idhayam Matrimony

த.வெ.க.வில் ஆதவ் அர்ஜுனாவிற்கு முக்கிய பொறுப்பு வழங்க திட்டம்..?

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      தமிழகம்
Adav-Arjuna 2024-12-11

சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து பேசிய நிலையில், ஆதவ் அர்ஜுனாவிற்கு த.வெ.க.வில் மாநில துணை அல்லது இணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த ஜன.24 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்துக்கு 19 கட்சி மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டார். பின்னர், சென்னை அருகே பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவா் விஜய், கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், பொருளாளா் வெங்கட்ராமன் ஆகியோரை வெளியே அனுப்பிவிட்டு, தனி அறையில் மாவட்ட பொறுப்பாளா்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினாா்.

புதிய நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய், கட்சி நிா்வாகிகள், தொண்டா்களை நம்பித்தான் த.வெ.க.வை தொடங்கியுள்ளதாகவும், கட்சி வளா்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என கட்சி அமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து ஒரு வாரம் ஆலோசனை நடத்தவிருக்கும் விஜய், மீதமுள்ள மாவட்ட நிா்வாகிகளையும் உடனடியாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளாா் என தகவல்கள் வெளியான நிலையில், த.வெ.க.வின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலா்கள் பட்டியலை விஜய் புதன்கிழமை வெளியிட்டாா்.

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா, த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து பேசிய நிலையில், ஆதவ் அர்ஜுனாவிற்கு த.வெ.க.வில் மாநில துணை அல்லது இணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆதவ் அர்ஜுன் இணைப்புக்கு பின்னர் வேறு கட்சிகளில் இருந்து வருபவர்களை த.வெ.க.வில் இணைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் சுமார் 40 நிமிடங்கள் ஆதவ் அர்ஜுனாவுடன் விஜய் பேசியதாகவும், த.வெ.க.வின் அரசியல் ஆலோசகராக ஆதவ் அர்ஜுனாவை நியமிக்கப்பட இருப்பதாகவும் கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்தால் மகிழ்ச்சிதான். வாழ்த்துகள்... எங்களுடன் தொடர்ந்து இயங்கவில்லை என்பது வருத்தம் தான் என திருமாவளவன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து