Idhayam Matrimony

இந்தியாவிற்கென பிரத்யேக ஏ.ஐ. மாடல் உருவாக்கப்படும்: மத்திய அமைச்சர் தகவல்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      இந்தியா
Ashwini-Vaishnav 2

புதுடில்லி, இன்னும்  10 மாதங்களுக்குள் இந்தியாவின் தனித்துவமான மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை நிவர்த்தி செய்யும் வகையில் ஏ.ஐ. மாடல் உருவாகும் என  மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி), கூகுள் (ஜெமினி) ஆகிய அமெரிக்க நிறுவனங்களே கோலோச்சி வருகின்றன.

இந்த நிலையில்தான்  3 நாட்களுக்கு முன் சீனா டீப்சீக் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் டீப்சீக் அமெரிக்காவின் சாட்ஜிபிடி, கூகுள் ஆகியவற்றிற்கு கடும் சவாலாக விளங்கும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

இந்த நிலையில் சாட்ஜிபிடி, டீப்சீக், ஜெமினி போன்று இந்தியா தன்கென பிரத்யேக ஏ.ஐ. மாடல் உருவாக்கி வருவதாக மத்திய எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி இந்தியாவின் முதல் ஏ.ஐ. மாடல் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். ஒப்புதல் கொடுத்த முதல் நான்கு மாதத்திலேயே அதற்கான கட்டமைப்பின் முதற்கட்ட பணிகளை தொடங்கப்பட்டது. இந்தியாவின் ஏ.ஐ. திட்டத்திற்கான முதல் தூண் என கருப்பதப்படும் அனைத்து நிறுவனங்களும், நிர்வாகங்களும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் மாடல் என்பதை உருவாக்கியுள்ளோம்.

 இதன் அடிப்படையில் 10 ஆயிரம் ஜி.பி.யு.எஸ். இலக்கு நிர்ணயித்த நிலையில், நாம் 18693 ஜி.பி.யு.எஸ். பட்டியலிட்டுள்ளோம். இந்த பணி சிறப்பாக அமைந்துள்ளது. விவசாயம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட 18 செயலிகளை உருவாக்க முதற்கட்ட நிதி ஒதுக்கீட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  நான்காவது கட்டம் ஏ.ஐ.யின் பாதுகாப்பு தொடர்பானது. ஏ.ஐ. பாதுகாப்பு நிறுவனம் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. வளர்ந்து வரும் நிறுவனங்கள், 10 பெரும் மென்பொருள் நிறுவனங்கள் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் 8 முதல் 10 மாதங்களுக்குள் இந்த ஏ.ஐ. மாடல் தயாராகிவிடும். இந்தியாவின் தனித்துவமான மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த ஏ.ஐ. மாடல் உருவாகும். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து