Idhayam Matrimony

அமெரிக்காவில் நிகழ்ந்த பயங்கரம்: ஹெலிகாப்டர் மீது பயணிகள் விமானம் மோதல்-18 பேர் பலி

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      உலகம்
Suicide 2023 04 29

வாஷிங்டன் , ஹெலிகாப்டர் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது இதில் பயணிகள் 18 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடுவானில் பிளாக் ஹாக் எனப்படும் ராணுவ ஹெலிகாப்டர் மீது அமெரிக்கன் ஏர்லைன்சின் பயணிகள் விமானம் ஒன்று பயங்கரமாக மோதியது. ரோனால்ட் ரீகன் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதி விபத்து ஏற்பட்டது. முன்னதாக கன்சாசிலிருந்து பறந்த வந்த பயணிகள் விமானம் அங்கு தரையிறங்க இருந்தது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 64 பேரும், ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் என்ற ஆற்றில் விழுந்தநிலையில் தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீட்புக் குழுக்கள் மூலம் இதுவரை போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விபத்து நிகழ்ந்தது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவசர நடவடிக்கையாக அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன. ஹெல்ப்லைன் எண்கள் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 800-679-8215 என்ற கட்டணமில்லா எண்ணை வெளியிட்டுள்ளது.

கூடுதல் தொலைபேசி எண்களுக்கு அமெரிக்காவிற்கு வெளியில் இருந்து அழைப்பவர்கள் news.aa.com ஐப் பார்வையிடலாம். கனடா, புவேர்ட்டோ ரிக்கோ அல்லது அமெரிக்க விர்ஜின் தீவுகளில் உள்ள விபத்தில் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்கள் 800-679-8215 ஐ நேரடியாக அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து