Idhayam Matrimony

மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபர்கள் கைது

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      தமிழகம்
Madurai-Junction

மதுரை, மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் இருந்து செல்போன்களை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை ரெயில் நிலையத்தில் பிளாட்பாரங்களில் இரவு நேரங்களில் பயணிகள் தங்களுக்கான ரெயில் வரும் வரை காத்திருப்பது வழக்கம். இரவு நேரம் என்பதால் பெரும்பாலான பயணிகள் பிளாட்பாரத்திலேயே தூங்கி விடுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடர்களும் அவ்வப்போது மதுரை ரெயில் நிலையத்திற்குள் வந்து திருடி செல்வதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்றுமுன்தினம் மதுரை ரெயில் நிலையத்தின் 1-வது பிளாட்பாரத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 நபர்களிடம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், கமுதி சின்ன உடப்பங்குளத்தை சேர்ந்த கருப்பையா மகன் கார்த்திக் குமார் (வயது 20), அதே பகுதியை சேர்ந்த மலைச்சாமி மகன் மணிகண்டன்(22) என தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியதில், இருவரும் பிளாட்பாரங்களிலும், ரெயில் நிலையத்தின் வளாகத்திலும் இரவு நேரங்களில் படுத்திருக்கும் பயணிகளிடம் செல்போன் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சிம்கார்டு இல்லாத 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து