எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஜகபர் அலிகான் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள பகுதிகளில் நடந்து வந்த கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த வெங்களூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜகபா் அலி (58) கடந்த 17-ம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். இதற்கிடையே ஜகபா்அலி கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதன் தொடா்ச்சியாக வழக்கு தொடா்பான ஆவணங்கள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவ்வழக்கு நேற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து, காவல் துறை பாதுகாப்புடன் புதைத்த இடத்திலேயே எக்ஸ்-ரே எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், உடலைத் தோண்டி எடுக்கும்போது புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஊடகங்கள் உள்ளிட்ட யாரைக்கும் அனுமதி தரக் கூடாது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


