Idhayam Matrimony

பட்ஜெட் தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழையுங்கள்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு வேண்டுகோள்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி: பட்ஜெட் தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழையுங்கள் என்று 

அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் அமர்வு இன்று (ஜனவரி 31-ம் தேதி) தொடங்குகிறது. ஜனாதிபதி திரெளபதி முர்மு பாராளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து, நாளை (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க நேற்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. பட்ஜெட் தொடர்பாகவும், கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

பாராளுமன்றம் சுமூகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் அனைத்து விவகாரங்கள் குறித்து எளிதாக விவாதிக்க முடியும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி., ஜெயராம் ரமேஷ், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ, பிரகலாத் ஜோஷி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து