Idhayam Matrimony

யமுனை நதி நீரை குடிக்க தயாரா? கெஜ்ரிவாலுக்கு ராகுல் சவால்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      இந்தியா
Rahul 2024-05-27

Source: provided

புதுடெல்லி: 5 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதியளித்தபடி யமுனை நீரைக் குடிக்க  முடியுமா  என்று கெஜ்ரிவாலுக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, யமுனை நதியில் அரியானா பா.ஜனதா அரசு நச்சை கலந்து மாசடைய வைத்துள்ளது என்று குற்றச் சாட்டை தெரிவித்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார் தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சவால் ஒன்றை விடுத்துள்ளார். கிழக்கு டெல்லியின் பவானா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கூறும்போது, கெஜ்ரிவால் ஒரு ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தினார். மோடி தனது உரைகளில் பொய் சொல்கிறார். அவரைப் போலவே, கெஜ்ரிவாலும் செய்கிறார். முந்தைய தேர்தலில் யமுனை நதியை தூய்மைப் படுத்தி அதில் குளித்து நீரை குடிப்பேன் என்று கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் அதை செய்வில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதியளித்தபடி யமுனை நீரைக் குடிக்க நான் அவருக்கு சவால் விடுகிறேன். நீங்கள் யமுனையின் தண்ணீரைக் குடித்து விட்டு, பிறகு உங்களை மருத்துவமனையில் சந்திக்கிறேன்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து