Idhayam Matrimony

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: குத்துச்சண்டை வீரர் வெட்டிக்கொலை

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      தமிழகம்
chennai

Source: provided

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பிரபல குத்துச்சண்டை வீரர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் - ராதா தம்பதியினரின் மகன் தனுஷ்,(24). குத்துச்சண்டை வீரரான இவர், தமிழகம் சார்பில் பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.

போலீஸ் பணிக்காக தயாராகி வந்த இவர் மீது, வீட்டின் அருகே இளைஞர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், அவரது போலீஸ் கனவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டின் அருகே நண்பருடன் நின்றிருந்த போது, சில மர்ம நபர்கள் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில் கழுத்து மற்றும் உடல்பகுதிகளில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனால், சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதனை தடுக்க முயன்ற தனுஷின் நண்பர் அருணுக்கும் கழுத்துப் பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற ஐஸ் ஹவுஸ் போலீசார், தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த அருணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 9 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் குத்துச்சண்டை வீரர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து