Idhayam Matrimony

அதிக வயதில் இரட்டை சதம்: கவாஜா புதிய சாதனை

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      விளையாட்டு
30-Ram-52

Source: provided

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய உஸ்மான் கவாஜா,  மிகவும் அதிக வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக இரட்டை சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற  புதிய சாதனையை  படைத்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி... 

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (ஜனவரி 29) காலேவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

கவாஜா இரட்டை சதம் 

ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 654 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளேர் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். அவர் 352 பந்துகளில் 232 ரன்கள் (16 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

புதிய சாதனை படைப்பு...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம், ஆஸ்திரேலிய அணியின் லெஜண்டரி வீரரான டான் பிராட்மேனுடன் உஸ்மான் கவாஜா சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். மிகவும் அதிக வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக இரட்டை சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை உஸ்மான் கவாஜா (38 வயது) படைத்துள்ளார். அவருக்கு முன்பாக, மிகவும் அதிக வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை டான் பிராட்மேன் தன்வசம் வைத்துள்ளார்.

முதல் ஆஸ்திரேலிய வீரர் 

இலங்கையில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையும் உஸ்மான் கவாஜாவையே சேரும். இதற்கு முன்பாக, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கர், கடந்த 2004 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 166 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து