எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை: மும்பை- மேகாலயா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டியில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மும்பை பந்துவீச்சு...
ரஞ்சி டிராபி தொடரில் நேற்று தொடங்கிய ஆட்டம் ஒன்றில் மும்பை- மேகாலயா அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
மேகாலயா திணறல்....
அதன்படி முதலில் களமிறங்கிய மேகாலயா அணிக்கு தொடக்கம் முதலே திணறியது. அந்த அணி 2 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து பிரிங்சாங் சங்மா- ஆகாஷ் சவுத்ரி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
தொடர்ந்து 4 விக்கெட்....
பிரிங்சாங் 19 ரன்னிலும் ஆகாஷ் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அனிஷ் சரக் 17, ஹிமான் புக்கான் 28 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் மேகாலயா அணி 86 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
5-வது மும்பை வீரர்....
இந்த போட்டியில் ஷர்துல் தாகூர், ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த 5-வது மும்பை வீரராக ஷர்துல் சாதனை படைத்துள்ளார்.
மும்பைக்காக ஹாட்ரிக் விக்கெட்கள்:
1) ஜஹாங்கீர் கோட் (மும்பை) vs பரோடா - மும்பையில் பிரபோர்ன் ஸ்டேடியம் (1943-44).
2) உமேஷ் குல்கர்னி (மும்பை) vs குஜராத் - ஆனந்தில் சாஸ்திரி மைதானம் (1963-64).
3) ஏ.எம். இஸ்மாயில் (மும்பை) vs சவுராஷ்டிரா - மும்பையில் பிரபோர்ன் ஸ்டேடியம் (1973-74).
4) ராய்ஸ்டன் டயஸ் (மும்பை) vs பீகார் - பாட்னாவில் மொயின்-உல்-ஹக் ஸ்டேடியம் (2023-24).
5) ஷர்துல் தாக்கூர் (மும்பை) vs மேகாலயா - மும்பையில் பி.கே.சி மைதானம் (2024-25).
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


