Idhayam Matrimony

கோலியின் காலைத்தொட்ட ரசிகர்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      விளையாட்டு
30-Ram-58-1

Source: provided

ரயில்வேஸ் அணிக்கு எதிராக நேற்று (ஜன.30) டில்லி அணி ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறது. 12 வருடங்களுக்குப் பிறகு விராட்கோலி விளையாடவிருப்பதால் நார்த் எண்ட், ஓல்ட் கிளப் ஹவுஸ் ஸ்டாண்ட் பகுதிகள் பார்வையாளர்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன. ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த விராட் கோலியிடம் ஓடிவந்த ரசிகர் திடீரென காலில் விழுந்து தொட்டுக் கும்பிட்டார். 

டாஸ் வென்ற டில்லி பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்துவரும் ரயில்வேஸ் அணி 30 ஓவர் முடிவில் 94/5 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இந்தப் போட்டியில் கட்டுப்பாடுகளை மீறிய ரசிகர் ஒருவர் கோலியின் காலைத் தொட்டு கும்பிட்டார். பின்னர், அவர் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார்.  இந்த விடியோ இணையத்தில் வைரலானது. 

சதங்கள் குறித்து கவாஜா

வார்னே - முரளிதரன் டிராபியில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காலேயில் நேற்று முன்தினம் (ஜன.29) தொடங்கியது. தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவரும் உஸ்மான் கவாஜா தனது முதல் இரட்டை சதத்தினை அடித்து அசத்தியுள்ளார். இரண்டாம் நாள் போட்டிக்கு முன்னதாக உஸ்மான் கவாஜா தான் அளித்த பேட்டியில் கூறியதாவது:  ஒவ்வொரு சதமும் எல்லாம்வல்ல இறைவனால் தரப்படுகின்றன. நான் அதைத்தான் நம்புகிறேன். 

நல்லதோ கெட்டதோ அதை ஒரேமாதிரியாக எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். எது நடந்தாலும் அதை நான் எனது நல்லதுக்காக நடப்பதாகவே கருதுகிறேன். கிரிக்கெட்டை தவிர்த்து எனக்கு வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனாலும், நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். கடினமாக உழைக்கிறேன். ஆனால் எல்லாவற்றையும் மேலே இருந்து ஒரு பெரிய நபர் கட்டுப்படுத்துகிறார். அதனால் சில கட்டத்துக்குப் பிறகு வாழ்க்கையை அவரிடமே விட்டுவிடுகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து