எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு நிகழ்த்திய உரையில் தெரிவித்தார்.
2025-26-ம் நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி உரையுடன் நேற்று (ஜன. 31) தொடங்கியது.
பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு உரையாற்றினார். மக்களவையில் அவர் பேசியதாவது,
நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சைபர் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் மோசடி, சைபர் குற்றங்கள், டீப்ஃபேக் தொழில்நுட்பம் ஆகியவை சமூக, நிதி மற்றும் தேசியப் பாதுகாப்பிற்கு கடுமையான சவால்களாக உள்ளன.
சிறு, குறு தொழில்களை மேம்படுத்தும் திட்டங்கள் அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றுக்கான கடன் உத்தரவாதத் திட்டம், மின் வணிக ஏற்றுமதி மையங்கள் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் வணிகத்தை அதிகரித்துள்ளன.
புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியாவை உலகளவில் சிறந்து விளங்கச் செய்வதே அரசின் நோக்கம். செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா தனது பணியைத் தொடங்கியுள்ளது' என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


