Idhayam Matrimony

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8% வரை இருக்கும் பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2025      இந்தியா
Nirmala-Seetharaman 2023-04-06

Source: provided

புதுடெல்லி: மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரெளபதி முர்மு, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

கடந்த ஓராண்டில் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்தும், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள், நிறைவடைந்த திட்டங்கள் குறித்தும் சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலான ஜனாதிபதி பேசினார்.

இதனைத் தொடர்ந்து, 2024 - 25 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பொருளாதார வளர்ச்சியானது 6.3 சதவிகிதம் முதல் 6.8 சதவிகிதம் வரை இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு மக்களவையில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

தொடர்ந்து, மாநிலங்களவையில் நேற்று பிற்பகல் பொருளாதார அறிக்கை சமர்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து