எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கன்தீப் சிங் பேடியின் தந்தை தர்லோச்சன் சிங் பேடி மறைந்ததையடுத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பரித்கோட் அரசு கல்வியியல் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய தர்லோச்சன் சிங் பேடி, திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டவராக விளங்கினார். “மனிதர்கள் மீதான அன்பை மையப்படுத்தியதாகவே திருக்குறள் திகழ்கிறது; அதனையேதான் குருநானக் பிரசாரம் செய்தார்” என்று கூறிய அவர், குறளின் கருத்துகளை எடுத்துச்சொல்லும் தூதுவராக, திருக்குறளைப் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்த்தார். அவரது இந்தப் பணி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறந்த அறிஞராக விளங்கிய அவரது மறைவு, தமிழ்நாட்டுக்கும் பஞ்சாப் மாநிலத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
தந்தையை இழந்து வாடும் ககன்தீப் சிங் பேடிக்கும், அவரது பிரிவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், முதல்வர், ககன்தீப் சிங் பேடியை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


