எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி: யமுனை நதி விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹரியானா அரசு, யமுனை நதியில் விஷத்தை கலப்பதாக டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டில்லிக்கு தண்ணீா் வழங்கும் யமுனை நதியில் ஹரியானா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாகவும் அமோனியா எனப்படும் விஷம் கலந்திருப்பதை உறுதிப்படுத்தியதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானா முதல்வர் நைப் சிங் சைனி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், விஷம் கலப்பதாக பொய் கருத்து தெரிவித்து டில்லி, ஹரியானா மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக கெஜ்ரிவால் மீது ஹரியானா அரசு சோனிபட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதன் அடிப்படையில் அவர், தேர்தல் ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.
இதனிடையே டில்லியில் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். யமுனை நதி விவகாரத்தில் காங்கிரஸ் இளைஞரணியினர், கெஜ்ரிவாலுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


