எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: சர்ச்சை சாமியார் நித்யானந்தா தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமைறைவாக உள்ளார். அவ்வப்போது தனது யூடியூப் சேனலில் தோன்றி உரையாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ள நித்யானந்தா, கைலாசா எனும் தனி நாட்டை உருவாக்கிவிட்டதாக பேசி வருகிறார்.
எனினும் , கைலாசா நாடு எங்கு இருக்கிறது; நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது தற்போது வரையில் புரியாத புதிராகவே இருந்து வந்தது. இந்த நிலையில், வழக்கு ஒன்றில் நித்யானந்தா குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், நித்யானந்தா எங்கு உள்ளார் என்ற தகவலை தெரிவித்துள்ளது.
மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, 'நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கிறார்,' என்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட கோர்ட்டு, இந்தியாவிலேயே இல்லாத நித்யானந்தாவின் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது. முன்னதாக, நித்யானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா என்றாலே பிரச்சினையாக இருக்கிறது என்று சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


