Idhayam Matrimony

சட்டவிரோதமாக குடியிருப்பு: கேரளாவில் 27 வங்கதேசத்தினர் கைது

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2025      இந்தியா
Jail

Source: provided

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த 27 வங்காளதேசத்தினர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் வடக்கு பரவூர் பகுதியில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இந்த தகவலின்பேரில் அப்பகுதியில் எர்ணாகுளம் போலீசார் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப்படையினர் சோதனை நடத்தினா்.

இந்த சோதனையில் வங்காளதேசத்தை சேர்ந்த 27 பேர் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற போர்வையில் தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 34 வங்காளதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து