Idhayam Matrimony

ஜூனியர் மகளிர் டி-20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2025      விளையாட்டு
INDIA 2025-01-24

Source: provided

கோலாலம்பூர் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

இந்தியா- இங்கி.,...

மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆயுஷி சுக்லா... 

பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை டேவினா பெரின் 40 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் அபி நார்குரோவ் 30 ரன்களும், அமு சுரேன்குமார் 14 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் பருணிகா சிசோடியா மற்றும் வைஷ்ணவி சர்மா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆயுஷி சுக்லா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

கமலினி அரைசதம்...

114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 15 ஓவர்களின் முடிவில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான கமலினி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 50 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கொங்கடி த்ரிஷா 29 பந்துகளில் 35 ரன்களும், சானிகா சால்கே 12 பந்துகளில் 11 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பருணிகா சிசோடியா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணி நாளை  (பிப்ரவரி 2) நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து