எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : ஜனாதிபதி எந்த நிலையிலும் சோர்வு அடையவில்லை. விளிம்புநிலை மக்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு ஜனாதிபதி பேசிய உரை சோர்வை தராது என ராஷ்டிரபதி பவன் கருத்து தெரிவித்துள்ளது.
பாராளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது.ஆண்டின் முதல் தொடர் என்பதால், ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி முர்மு சுமார் 1 மணி நேரம் உரையாற்றினார். அதன் பின்னர் பாராளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின்னர், ஜனாதிபதி உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி இறுதிப்பகுதியை வாசிக்கும் போது சோர்வு அடைந்துவிட்டார், பேசமுடியவில்லை, பாவம் என கூறினார். சோனியா காந்திக்கு ஆதரவாக ராகுலும் கருத்துகளை தெரிவித்தார்.
சோனியா காந்தியின் பதிலைத் தொடர்ந்து, அவரது கருத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சலிப்பானது. திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்கிறார்” என்று தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகளை “இழிவானது” என்று பா.ஜ.க. கடுமையாக சாடியுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா கூறுகையில், "குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சோனியா காந்தி ‘பாவம்’ என்று கூறியிருப்பதை நானும், ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டனும் கண்டிக்கிறோம். வேண்டுமென்ற பயன்படுத்தப்பட்ட இதுபோன்ற வார்த்தைகள் காங்கிரஸ் கட்சியின் மேட்டுக்குடி, ஏழைகளுக்கு எதிரான, பழங்குடியினருக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சோனியா காந்தியின் கருத்துக்கு ராஷ்டிரபதி பவன் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாராளுமன்ற உரையின் போது ஜனாதிபதி சோர்வு அடையவில்லை. காயப்படுத்தும் வகையில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி சோர்வு அடைந்துவிட்டார், அவரால் பேசமுடியவில்லை என்று கூறி இருந்தனர். ஜனாதிபதி எந்த நிலையிலும் சோர்வு அடையவில்லை. விளிம்புநிலை மக்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு ஜனாதிபதி பேசிய உரை சோர்வை தராது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சோனியாவின் பேச்சுக்கு விளக்கமளித்துள்ள எம்.பி பிரியங்கா காந்தி, ``என் அம்மாவுக்கு 78 வயதாகிறது. இவ்வளவு நீண்ட உரையை வசித்ததால் சோர்வடைந்தார் என்று சாதாரணமாகத் தான் அவர் கூறினார். குடியரசுத் தலைவர் மீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஊடகங்கள் இதைத் திரித்துக் கூறியது மிகவும் துரதிஷ்டவசமானது. அவர்கள் இருவரும் மரியாதைக்குரியவர்கள் மற்றும் நம்மை விட வயதானவர்கள்." என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


