எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள் சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்களான ஆர். சதீஷ் (தருமபுரி), எஸ். சரவணன் (திண்டுக்கல்), எம். பிரதாப் (திருவள்ளூர்), சி. தினேஷ் குமார் (கிருஷ்ணகிரி), எஸ். சேக் அப்துல் ரகுமான் (விழுப்புரம்), கே. தர்பகராஜ் (திருவண்ணாமலை), வி. மோகனசந்திரன் (திருப்பத்தூர்), டாக்டர் ஆர். சுகுமார் (திருநெல்வேலி), கே. சிவசவுந்தரவள்ளி (திருவாரூர்) ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு முதல்வர் புதிய மாவட்ட கலெக்டர்களிடம் உரையாற்றிய போது, இன்று (நேற்று) முதல் மக்களுடன் நேரடி தொடர்பில் களத்தில் இருக்கப் போகும் நீங்கள், அரசின் முத்திரை திட்டங்கள், அன்றாடம் செயல்படுத்தும் திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள், இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், மக்கள் குறை தீர்ப்பு முகாம் மனுக்கள் மீதும், முதல்வரின் முகவரி மனுக்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி, தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொண்டு, அவர்களின் குறைகளை அங்கேயே தீர்த்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


