Idhayam Matrimony

8 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.வில் ஐக்கியம்

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      இந்தியா
BJP 2024-03-05

Source: provided

புதுடில்லி : டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 8 பேர் நேற்று ராஜினாமா செய்ததை தொடர்ந்து  நேற்று பா.ஜ.,வில் இணைந்தனர். 

70 தொகுதிகள் கொண்ட டில்லி சட்டசபைக்கு, வரும் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது; 8-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இத்தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி - பா.ஜ., - காங்., இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்காத ஆளும் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் எட்டு பேர், நேற்று முன்தினம் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதங்களை சட்டசபை சபாநாயகர் நிவாஸ் கோயலுக்கு அனுப்பினர்.

நேற்று (01.02.2025) எட்டு எம்.எல்.ஏ.,க்களும் பா.ஜ., தேசிய துணை தலைவர் பைஜெயந்த்பாண்டா மற்றும் பா.ஜ., டில்லி பிரிவு தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் பா.ஜ.,வில் ஐக்கியமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து