Idhayam Matrimony

எந்நேரத்திலும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அண்ணா தொழிற்சங்கம் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      தமிழகம்
BUS 2024-08-30

Source: provided

சென்னை: பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க., புரட்சி பாரதம் உள்ளிட்ட 22 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர், அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர். கமலகண்ணன் செய்தியாளர்களுடன் பேசுகையில், “போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக வரும் பிப். 5 ஆம் தேதி போக்குவரத்துத் துறை செயலரை சந்திக்க இருக்கின்றோம். இதனையடுத்து, பிப். 20 ஆம் தேதி முதல் எந்த நேரத்தில் வேண்டுமானலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும்.

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைத் தவிர்த்து மற்றச் சங்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை நடத்தவுள்ளோம். கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, பணப்பலன் வழங்கப்படவில்லை” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து