Idhayam Matrimony

டெல்லியில் பள்ளி மாணவர்களுடன் மரத்தடியில் அமர்ந்து கலந்துரையாடிய பிரதமர்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      இந்தியா
modi

Source: provided

 புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மரத்தடியில் அமர்ந்து கலந்துரையாடினார்.

டெல்லி தேர்தல் நடைபெற இரண்டு நாள்களே உள்ள நிலையில்  நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு பிப்.5ல் சட்டப்பேரவைத் தேர்தலும், பிப்.8ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியா போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவி வருகின்றது.

முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. டெல்லியில் நேற்று முன்தினம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆம் ஆத்மி அரசை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

இந்த நிலையில், தலைநகரில் நேற்று பள்ளி மாணவர்களுடனான சந்திப்பை நிகழ்த்தினார் பிரதமர் மோடி. அந்த உரையாடலில், மரத்தடியில் மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடினார். ஆம் ஆத்மி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், மாணவர்களின் எதிர்காலத்தை விட அதன் பிம்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

ஆம் ஆத்மி அரசு தனது சொந்த பிம்பத்தைப் பாதுகாக்க, நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை மட்டுமே ஒன்பதாம் வகுப்புக்கு மேல் அடுத்த வகுப்பிற்குச் செல்ல அனுமதிக்கிறது என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். ஏனென்றால் ஆம் ஆத்மி அரசின் நற்பெயர் கெட்டுவிடும் என்பதால் தான் இந்த நேர்மையற்ற வேலையைச் செய்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து