Idhayam Matrimony

கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிரான மனு தள்ளுபடி

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      இந்தியா
RN-Ravi 2023 04 05

Source: provided

புதுடில்லி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது, துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட சில விவகாரங்களில் கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டத்தொடரில் கவர்னர் ஆர்.என். ரவி தனது உரையை நிகழ்த்தாமல் வெளியேறிச் சென்றார். தொடக்கத்திலேயே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கவர்னர் தரப்பு கூறியதற்கு தமிழக அரசு மறுத்துவிட்டது.

இதையடுத்து, கவர்னர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் தனது உரையை நிகழ்த்தாமல் சென்றது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், அவரைத் தமிழக கவர்னர் பதவியில் இருந்து திரும்பப் பெற மத்திய அரசுக்கும் குடியரசுத் தலைவருக்கும் உத்தரவிட வேண்டும் எனவும் கூறி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், இதுபோன்ற வழக்குகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து