எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராய்ப்பூர்: சத்தீஷ்காரில் நடந்த என்கவுன்டரில் நக்சலைட்டு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஷ்கர் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.
அந்த வகையில், சத்தீஷ்காரின் கான்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கான்கர் மற்றும் நாராயண்பூர் மாவட்டங்களிக்ன் எல்லையில் உள்ள ஒரு காட்டை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது.
இந்த என்கவுன்டரில் ஒரு நக்சலைட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டு உடல் மற்றும் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. மேலும் சில நக்சலைட்டுகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப்படையினர் அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு ஜனவரி முதல் சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த தனித்தனி என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


