எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வேலூர் : வேலூர் மத்திய சிறையில், கைதிளால் நடத்தப்படும் கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளை, பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் சேவை ஒரு சில நாள்களுக்கு முன்பு தொடங்கியிருக்கிறது.
தமிழ்நாடு சிறைத் துறை சார்பில், சிறைக் கைதிகளுக்குத் தேவையான கோழிக்கறியை தங்களே உற்பத்தி செய்து கொள்வதற்காக, தமிழகத்தில் ஒரு சில சிறை வளாகங்களுக்குள் கடந்த டிசம்பர் மாதம் முதல் கோழிப் பண்ணை தொடங்கப்பட்டுள்ளது. வாரத்தில் இரண்டு நாள்கள் சிறைக் கைதிகளுக்கு கோழிக்கறி வழங்குவதை எளிமையாக்கவும், சிறந்த கோழிக்கறி கிடைக்கும் வகையிலும் அதனை வாங்குவதால் அரசுக்கு ஏற்படும் ரூ.10 கோடி செலவினத்தை மிச்சம் பிடிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த திட்டம் சிறப்பாக செயல்பாட்டுக்கு வந்து, கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள், சிறைக் கைதிகளுக்குப் போக, பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்கட்டமாக முழுக் கோழியும், கறியாகவும் விற்பனைக்கு வந்திருக்கிறது.
சிறை அதிகாரிகள் மேற்பார்வையில், சிறைக் கைதிகளால், இந்த கோழிப்பண்ணையில் இருக்கும் கோழிகள் பராமரிக்கப்படுவதாகவும், 145 கிலோ கோழிக்கறி ஆண்கள் சிறைப் பிரிவுக்கும், 12 கிலோ கோழிக்கறி பெண்கள் சிறைப் பிரிவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. வாரத்தில் இரண்டு நாள்கள் சிறைக் கைதிகளுக்கு சமைத்த கோழிக்கறி வழங்கப்படுகிறது. முதலில் சிறைக் கைதிகளுக்காக தொடங்கப்பட்ட இந்த கோழிப்பண்ணையில் தற்போது 40 சதவீதம் கோழிக்கறி சிறைக் கைதிகளுக்கும், 60 சதவீதம் கோழிக்கறி விற்பனைக்கும் கொண்டு செல்லப்படும் வகையில் வளர்ச்சியடைந்திருப்பது சிறைத் துறையினருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


