Idhayam Matrimony

பிரக்ஞானந்தாவுக்கு துணை முதல்வர் வாழ்த்து

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      விளையாட்டு
Udayanidhi 2021 12 12

Source: provided

சென்னை : மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரக்ஞானந்தா சாம்பியன்...

நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் மற்றொரு தமிழக வீரர் குகேஷை எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா டை பிரேக்கிற்கு பிறகு வெற்றி பெற்றார். தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா கடைசியில் விளையாடிய மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் அவர் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

துணை முதல்வர் வாழ்த்து...

இந்நிலையில், டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

திறமையின் பிரதிபலிப்பு...

2025-ம் ஆண்டின் டாடா ஸ்டீல்ஸ்-ன் சாம்பியனாக உருவெடுத்த பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது. இத்தகைய மதிப்புமிக்க நிகழ்வில் பெற்ற வெற்றி அவருடைய திறமை மற்றும் உறுதிப்பாட்டின் உண்மையான பிரதிபலிப்பாகும்.

குகேஷுக்கும் வாழ்த்து...

பிரக்ஞானந்தா உடனான போட்டியில் சிறப்பாக விளையாடிய குகேஷுக்கும் வாழ்த்துகள். இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்ட வீரர்களாக இருப்பதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது. அவர்களின் வெற்றியால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவர்களின் வாழ்க்கையில் பல வெற்றிகளை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து