Idhayam Matrimony

தி.மு.க. மாணவர் அணி சார்பில் டெல்லியில் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      தமிழகம்
DMK 2024 08 16

Source: provided

சென்னை : வருகிற 6-ம் தேதி தி.மு.க.  மாணவர் அணி சார்பில் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தி.மு.க.  மாணவர் அணி செயலாளர் எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய பா.ஜ.க.  அரசின் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி, கழகத் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் அறிவிப்பிற்கிணங்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலோடு, தலைநகர் டெல்லி, ஜந்தர் மந்தரில் தி.மு.க.  மாணவர் அணி சார்பில், வருகிற (06.02.2025) அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

தி.மு.க.  மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் தங்களது துணை அமைப்பாளர்கள் மற்றும் மாணவர் அணியினருடன் பெருமளவில் பங்கேற்று ஆர்பாட்டத்தை வெற்றியடைச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் கல்வி உரிமை; தமிழ்நாட்டின் மாநில உரிமையை காத்திட நாம் அனைவரும் அணி திரள்வோம். யு.ஜி.சி.யின் அதிகார அத்துமீறலை முறியடிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து