எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், பா.ஜ.க. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நாளை சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. கட்சிகள் அனைத்தும் ஒன்றின் மீது மற்றொன்று வைக்கும் குற்றச்சாட்டுகளால் பிரசார கூட்டங்களில் அனல் பறக்கிறது. இந்த பிரசாரம் நேற்று (திங்கட்கிழமை) மாலையுடன் ஓய்ந்தது. எனவே தலைநகர் முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரம் வேகமெடுத்து உள்ளது. பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பா.ஜ.க. வை கடுமையாக விமர்சித்தார். கெஜ்ரிவால் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:- பா.ஜ.க. தனது குண்டர்களையும், டெல்லி போலீசாரையும் பயன்படுத்தும். வாக்காளர்களை அச்சுறுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள். குறிப்பாக குடிசைப்பகுதிகளில் உள்ள மக்களை அச்சுறுத்துகிறார்கள்.குடிசைப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து விரலில் மை வைத்து விடுகிறார்கள். அவர்கள் வாக்களிக்க முடியாதபடி இப்படி செய்கிறார்கள். எனவே, மக்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், விரலில் வைக்க விடாதீர்கள்" என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


