எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், டெல்லியின் கல்காஜி சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தபுரி பகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும், அம்மாநில முதல்-மந்திரியுமான அதிஷியும் அவரது ஆதரவாளர்கள் 50 முதல் 70 பேரும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காணப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய காவல்துறையினரை ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறையை மீறியதாக முதல்வர் அதிஷி மீதும், காவலரை தாக்கியதாக ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிஷி கூறியதாவது, "பா.ஜ.க. வேட்பாளர் ரமேஷ் பிதூரியும் அவரது குடும்பத்தினரும் வெளிப்படையாக விதிமுறைகளை மீறி வருகிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தேன், ஆனால் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


