Idhayam Matrimony

மணிப்பூரில் 9 பயங்கரவாதிகள் கைது

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      இந்தியா
Manipur 2023 06 06

Source: provided

இம்பால் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 20 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது.இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் தவுபல் மாவட்டங்களில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த 9 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இம்பால் கிழக்கு மாவட்டத்தின் மந்திரிபுக்ரி தாகுர்பாரி பகுதியில் காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 பேரை நேற்று பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 மி.மீ பிஸ்டல், இரண்டு கைக்குண்டுகள், தோட்டாக்கள் மற்றும் 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, இம்பால் மேற்கு, காக்சிங், காக்லீபாக் மற்றும் தவுபல் மாவட்டங்களில் தலா ஒருவரை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து