எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : தேர்தல் ஆணையம் ஒரு நபர் அமைப்பு அல்ல என்று தங்கள் மீதான ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 18-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதை சுட்டிக்காட்டி நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், “தேர்தல் நடத்தை விதிகளை பா.ஜ.க. மீறுவதாகக் கூறப்படுவதை தேர்தல் ஆணையம் புறக்கணித்து வருகிறது. ஓய்வுக்குப் பிறகான அரசு பணியைப் பெறுவதற்காக ராஜீவ் குமார் பா.ஜ.க. மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்.” என குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், அவரது இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "டெல்லி தேர்தலை ஒட்டி இந்திய தேர்தல் ஆணையத்தை அவதூறு செய்ய வேண்டுமென்ற நோக்கிலும், அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலும் செயல்கள் நடைபெறுவதை 3 உறுப்பினர்களைக் கொண்ட ஆணையம் கூட்டாகக் கவனித்தது.
தேர்தல் ஆணையம் ஒரு நபர் அமைப்பு போல கருதிக் கொண்டு இத்தகைய செயல்கள் நடந்துள்ளன. அரசியலமைப்பு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், புத்திசாலித்தனத்துடன் செயல்படவும், குற்றச்சாட்டுகளுக்கு அடிபணியாமல் இருக்கவும் முடிவு செய்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் நேற்று முன்தினம்நிறைவடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சியிடம் சரணடைந்திருக்கும் விதத்தைப் பார்க்கும்போது, தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இல்லாதது போல தோன்றுகிறது. இது மிகப் பெரிய கேள்விகளை எழுப்புகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார் இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெறுவது குறித்து மக்கள் மனதில் பல கேள்விகள் எழுவது நியாயமானதே. ஓய்வுக்குப் பின்பு அவருக்கு என்ன மாதிரியான பதவிகள் வழப்படும்? ஆளுநர் பதவியா அல்லது குடியரசுத் தலைவர் பதவியா? நான் ராஜீவ் குமாரிடம் இரு கரம் கூப்பி ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் கடமையைச் செய்யுங்கள், பதவிக்கான பேராசையை விட்டுவிடுங்கள். உங்களின் பதவிக் காலத்தின் இறுதியில் நாட்டை, நாட்டின் ஜனநாயகத்தை அழிக்காதீர்கள்.” என்று தெரிவித்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


