Idhayam Matrimony

ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்தது: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      தமிழகம்
gold 2023 01 26

Source: provided

சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டு ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.

தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகும் தொடர்ந்து ஏற்றத்திலேயே தங்கம் விலை இருந்து வந்ததை பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டு இறுதி வரை ரூ.59 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலான இடைப்பட்ட விலையிலேயே தங்கம் விலை காணப்பட்டது.

எப்போது வேண்டுமானாலும் ரூ.60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் (ஜனவரி) 22-ம் தேதி அந்த நிலையையும் எட்டியது. கடந்த 31-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.61,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.

இந்த சூழலில் மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது. இதன்படி நேற்று முன்தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.7,810 -க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.106-க்கு விற்பனையானது.

இந்நிலையில் தங்கம் விலை நேற்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இதன்படி வரலாற்றில் முதல்முறையாக சவரனுக்கு 63,000 கடந்தது தங்கம் விலை. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905 -க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.107-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து