Idhayam Matrimony

தஜிகிஸ்தானில் பயங்கரம்: சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதிகள் 5 பேர் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      உலகம்
Gun 2023 04 17

Source: provided

துஷான்பே : தஜிகிஸ்தானில் சிறையில் இருந்து தப்ப முயன்ற 5 கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் உள்ள சிறைச்சாலையில் சில கைதிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் கைதிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சில கைதிகள் அங்கிருந்து தப்ப முயன்றனர். அவர்களை சிறைக் காவலர்கள் தடுத்தபோது, அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இந்த தாக்குதலில் 3 காவலர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதிகளை நோக்கி காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 கைதிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பு தஜிகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து