எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அமெரிக்கா : எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சிக்கு முன்பு, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி, எல்-1 விசாக்களின் காலம் நிறைவடைந்தால் 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இதையடுத்து புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை 540 நாள்களாக அதிகரித்து பைடன் அரசு பொறுப்பேற்ற பிறகு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், ஜோ பைடனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் ஜான் கென்னடி மற்றும் ரிக் ஸ்காட் ஆகியோர் மறுஆய்வுச் சட்டத்தின் கீழ் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். ”பைடன் அரசின் 540 நாள்கள் கால நீட்டிப்பு ஆபத்தான முடிவு. இதனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்காணிப்பது காவல்துறைக்கு சவாலானதாக மாறிவிடும். நமது குடியேற்றச் சட்டங்களை செயல்படுத்துவதற்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்காகவும் பைடன் அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என்று தீர்மானத்தில் ஜான் கென்னடி குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


