முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 16ம் தேதி வேலூரில் நடக்கிறது அ.தி.மு.க. இளைஞர் பாசறை மாநாடு

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      அரசியல்
ADMK-Office

சென்னை, அ.தி.மு.க. இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறையில் மண்டல மாநாடு வரும் 16 ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அ.தி.மு.க. இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தி்ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை வரும் 24.ம்தேதி  - ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கியும்; பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தியும் சிறப்பாகக் கொண்டாடுவது என்று, தீர்மானிக்கப்பட்டது,

அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை சார்பில், வருகின்ற 16.2.2025 அன்று மண்டல அளவிலான லட்சிய மாநாட்டை, வேலூரில் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.                அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணை க்கிணங்க, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பூத் வாரியாக அ.தி.மு.க.  இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது.  

இப்படிவங்களை கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளைக் கொண்டு, விரைவாக பாசறைக்கு உறுப்பினர்களைச் சேர்த்து, வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள், மாவட்டக் செயலாளர்கள் மூலம் தலைமைக்கு அனுப்பி வைத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் டாக்டர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்,   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து