Idhayam Matrimony

கிருஷ்ணகிரி அருகே மாணவி வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      தமிழகம்
Jail 2024-10-04

Source: provided

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்த மாணவி கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் உள்பட மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் நேற்றுமுன்தினம் பள்ளியின் முன்பாக போராட்டம் நடத்தினர். குற்றம் செய்த ஆசிரியர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மாணவிக்கும் ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் போராட்டத்தைக் கைவிடும்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து