Idhayam Matrimony

போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: அ.தி.மு.க. இளைஞர் பாசறை வலியுறுத்தல்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      தமிழகம்
ADMK

சென்னை, போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஓடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது, பாசறையின் மாநில செயலாளர் டாக்டர் பரமசி்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், எதிர்க்கட்சித்துணைத்தலைவரும் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்,

இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்தும்;நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றிக்கு பணியாற்றுவதுஸ  குறித்தும் விவாதிக்கப்பட்டது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளைமுன்னிட்டு, 24-ம் தேதிதமிழ் நாடு முழுவதும் மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட ஏழை,எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கியும்  விளையாட்டுப் போட்டிகளை நடத்தியும் சிறப்பாகக் கொண்டாடுவது என்று, அ.தி.மு.க.  இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை சார்பில் தீர்மானிக்கப்பட்டது.

அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை சார்பில், வருகின்ற 16.2.2025 அன்றுமண்டல அளவிலான லட்சிய மாநாட்டை, வேலூரில் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய அ.தி.மு.க.  பொதசெயலாளர்எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவிக்கப்பட்டது. தமிழகம்முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்பூத் வாரியாக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைக்குஉறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்படிவங்களைஇளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளைக் கொண்டு, விரைவாக பாசறைக்குஉறுப்பினர்களைச் சேர்த்து, வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள், மாவட்டசெயலாளர்கள் மூலம் தலைமைக்கு அனுப்பி வைத்திட இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் போதை வஸ்துகளின்புழக்கத்தை தமிழகத்தில் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்கு, காவல் துறை முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இக்கூட்டத்தின் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து