எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டெல்லி முதல்வர் அதிஷி மற்றும் சஞ்சய் சிங் மீதான அவதூறு வழக்கு விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அதிஷி மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் புதுடெல்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித் பா.ஜ.க. விடமிருந்து கோடிக்காணக்கான ரூபாய் வாங்கியது மட்டுமல்லாமல், ஆம் ஆத்மியை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. வுடன் கூட்டு சேர்ந்ததாகவும் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் அதிஷி மற்றும் சஞ்சய் சிங்கிற்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று கூடுதல் தலைமை நீதிபதி பராஸ் தலால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம் ஆத்மி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த புகார் மீதான விசாரணை குறித்து வாதிட நேரம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புதுடெல்லி தொகுதியில் தீட்சித் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


