Idhayam Matrimony

அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      தமிழகம்
anna-university 2025-01-21

சென்னை, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஞானசேகரனுக்கு வியாழக்கிழமை குரல் பரிசோதனை செய்யப்பட்டது.

கடந்த டிச.23-ஆம் தேதி அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா்.  சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் ஞானசேகரனை 7 நாள்கள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், ஞானசேகரனின் போனில் உள்ள குரல் அவருடையதுதான் என்பதை உறுதி செய்வதற்காக நேற்று  குரல் பரிசோதனை நடைபெற்றது.  சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தடயவியல் ஆய்வகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, விசாரணை நீதிமன்றத்தில் ஞானசேகரனை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஆஜர்படுத்தவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து