எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து, இந்திய வீரர் ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இதுவரை 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
முதல் ஒருநாள் போட்டி...
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஜடேஜா 42 விக்கெட்டுகள்...
இந்திய ஆல் ரவுண்டரான ஜடேஜா, இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இதுவரை 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


