எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாக்பூர், ஓய்வு குறித்த நிருபர்களின் கேள்வியால் ரோஹித் சர்மா கோபமடைந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு...
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம், சாம்பியன்ஸ் டிராபியுடன் நீங்கள் ஓய்வு பெறப் போகிறீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
ரோகித் சர்மா ஆத்திரம்...
இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த ரோகித் சர்மா, "என்ன மாதிரியான கேள்வி இது. டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஒருநாள் போட்டிகள் வித்தியாசமானவை. எப்போதும் மேடு பள்ளங்கள் இருக்கும் என்பது வீரர்களான எங்களுக்குத் தெரியும். அதை எனது கெரியரில் நிறைய எதிர்கொண்டுள்ள எனக்கு இது புதிதல்ல. ஒவ்வொரு தொடரும் ஒவ்வொரு நாளும் புதிது என்பதால் கடந்த காலத்தை பார்க்காமல் வருங்கால சவால்களை நான் எதிர்நோக்கியுளேன்.
போட்டிகளில் கவனம்...
3 ஒருநாள் போட்டிகள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி வரவிருக்கும் நிலையில் என்னுடைய ஓய்வு பற்றி இங்கு பேசுவதில் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?. இது போன்ற செய்திகள் பல வருடங்களாக சென்று கொண்டிருக்கின்றன. அதற்கான விளக்கத்தைக் கொடுப்பதற்காக இங்கே நான் இல்லை. தற்போதைய போட்டிகளில் நான் கவனம் செலுத்துகிறேன். அதன் பின் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


